பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் 'கண்' இனி தப்பிக்க முடியாது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சூலுார்:சுல்தான்பேட்டையில் மாவட்ட எல்லைப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.சூலுார், கருமத்தம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், கோவை மாவட்டத்தின் எல்லை பகுதிகள் முடிந்து, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகள் துவங்குகின்றன. விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்,
 மாவட்ட எல்லையில் 'கண்'  இனி தப்பிக்க முடியாது

சூலுார்:சுல்தான்பேட்டையில் மாவட்ட எல்லைப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.சூலுார், கருமத்தம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், கோவை மாவட்டத்தின் எல்லை பகுதிகள் முடிந்து, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகள் துவங்குகின்றன. விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், எளிதில் மாவட்ட எல்லையை கடந்து சென்றுவிடுவர். இதனால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனால், எல்லைப் பகுதிகளில் கண்காணிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின் படி, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு பகுதியாக, சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கீழ் வரும் எல்லைப் பகுதிகளான, ஜல்லிப்பட்டி, ஜே. கிருஷ்ணாபுரம், செஞ்சேரிப்புத்துார் ஆகிய இடங்களில், 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X