பொது செய்தி

தமிழ்நாடு

தயாராகும் சத்துணவு ஊழியர்கள்: அதிகாரிகள் சொல்வது இதுதான்...

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சூலுார்:பள்ளிகள் திறக்கப்படுவதால், சூலுார் ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.வரும் செப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வர உள்ளனர். சூலுார் ஒன்றியத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள்

சூலுார்:பள்ளிகள் திறக்கப்படுவதால், சூலுார் ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.வரும் செப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வர உள்ளனர். சூலுார் ஒன்றியத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 25 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் 593 மாணவர்கள், 406 மாணவியர் சத்துணவு உட்கொள்கின்றனர்.வரும் செப்., 1 முதல் சத்துணவு சமைக்கும் பணி துவங்க உள்ளதால், அமைப்பாளர்கள், சமையலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என, ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.எவ்வளவு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை, தடுப்பூசி போட்டுக்கொண்டு பணிக்கு வர தயாராகுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X