பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய மறந்தும் மறந்துடாதீங்க...

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அன்னுார்:பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா அறிக்கை:பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக, மழை, வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதல் ஆகியவற்றால் பயிர்கள் சேதமடைந்தால், அதற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால், முழு தொகை பெறலாம்.அன்னுார் வட்டாரத்தில், வாழைக்கு காப்பீடு செய்ய,

அன்னுார்:பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா அறிக்கை:பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக, மழை, வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதல் ஆகியவற்றால் பயிர்கள் சேதமடைந்தால், அதற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால், முழு தொகை பெறலாம்.அன்னுார் வட்டாரத்தில், வாழைக்கு காப்பீடு செய்ய, ஒரு ஏக்கருக்கு, 4,640 ரூபாய், மஞ்சள் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு 4,023, மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 1,630 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகை செலுத்த வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளிக்கு, செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம். விபரங்களுக்கு, 97919 98833, 95784 52676 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X