பொது செய்தி

தமிழ்நாடு

உணவைத் தேடி எங்கெங்கோ... உணவைத் தேடி எங்கெங்கோ... கிளிகளுக்கு இப்படியா நடக்கணும்!

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சூரியகாந்தி பயிரிடுவது குறைந்ததால், தென்னை மர பொந்துகளில் பச்சை கிளிகள் இரை தேடி வருகின்றன.கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கிராமங்களில், யானை, மயில், காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான் ஆகியவை, பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயம் செய்யும் பரப்பளவு, இப்பகுதியில் படிப்படியாக குறைந்து
 உணவைத் தேடி எங்கெங்கோ...  உணவைத் தேடி எங்கெங்கோ... கிளிகளுக்கு இப்படியா நடக்கணும்!

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சூரியகாந்தி பயிரிடுவது குறைந்ததால், தென்னை மர பொந்துகளில் பச்சை கிளிகள் இரை தேடி வருகின்றன.கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கிராமங்களில், யானை, மயில், காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான் ஆகியவை, பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயம் செய்யும் பரப்பளவு, இப்பகுதியில் படிப்படியாக குறைந்து வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சூரியகாந்தி பயிரிட்ட தோட்டங்களில் அவற்றின் விதைகளை, பச்சை கிளிகள் அதிகம் விரும்பி உண்பதால், அதை கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள், தற்போது, சூரியகாந்தி பயிரிடுவதை மொத்தமாக நிறுத்தி விட்டனர். அதற்கு பதிலாக, கொண்டைக்கடலையை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், உணவின்றி தவிக்கும் பச்சைக்கிளிகளுக்கு, தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு துளையிட்ட பகுதிகளில் உள்ள பூச்சி, புழுக்களை உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் கூறியதாவது:தென்னந்தோப்பில், மாட்டு சாண எருக்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கிற பகுதிகளிலிருந்து, காண்டாமிருக வண்டுகள் உற்பத்தியாகிறது. இது தென்னை மரங்களில் வெளிப்புறப் பகுதியில் துளையிட்டு, அதன் வழியாக நுழைந்து, தென்னை மரத்தின் நடுப் பகுதியில் உள்ள கூழ் போன்ற திரவத்தை உண்ண தொடங்குகின்றன.உணவு கிடைக்காத பச்சைக்கிளிகள், மழைக்காலத்தில் பள்ளம் போன்ற இந்த பொந்துகளில் நீர் தேங்கி உற்பத்தியாகும் புழு, பூச்சிகளை உண்ண தொடங்குகின்றன. காண்டாமிருக வண்டால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களில், அடிக்கடி காண முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202108:50:38 IST Report Abuse
முருகேசன்.ஆ கிளிகள் சுத்த சைவம்.பழங்கள் ,தானியங்களை மட்டுமே உண்ணும்.குடியிருப்புக்கு மட்டுமே மரங்களில் உள்ள பொந்துகளை தேடிச்செல்லும்.
Rate this:
Cancel
27-ஆக-202108:50:38 IST Report Abuse
முருகேசன்.ஆ Please don't repeat the same comment
Rate this:
Cancel
27-ஆக-202108:50:38 IST Report Abuse
முருகேசன்.ஆ கிளிகள் சுத்த சைவம்.பழங்கள் ,தானியங்களை மட்டுமே உண்ணும்.குடியிருப்புக்கு மட்டுமே மரங்களில் உள்ள பொந்துகளை தேடிச்செல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X