பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டை கண்டால் திட்டம் 'ரெடி!' கைவரிசை காட்டும் கொள்ளையர்கள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நீண்டகாலமாக பூட்டியிருக்கும் வீட்டை குறிவைக்கும் திருடர்கள், கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இது தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வீரபாண்டி பிரிவு மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில், சில நாட்களாக
 பூட்டிய வீட்டை கண்டால் திட்டம் 'ரெடி!' கைவரிசை காட்டும் கொள்ளையர்கள்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நீண்டகாலமாக பூட்டியிருக்கும் வீட்டை குறிவைக்கும் திருடர்கள், கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இது தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வீரபாண்டி பிரிவு மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில், சில நாட்களாக கொள்ளைசம்பவங்கள் நடந்து வருகின்றன.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், இச்சம்பவங்கள் நடந்த பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லை. பலர், வீடுகளை பூட்டி விட்டு, தங்களுடைய சொந்த ஊர்களில் வசிப்பது தெரியவந்தது.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, இருப்பதை சுருட்டிக் கொண்டு சென்றது தெரியவந்தது.இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:திருடர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரின் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.இரவு நேரத்தில் குடியிருப்பை சுற்றியுள்ள வெளிப்புறத்தில், நல்ல வெளிச்சமுள்ள, மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.வீட்டின் கதவு, இருபுற தாழ்பாள் கொண்டதாக இருக்க வேண்டும். கிரில் கதவு கூடுதலாக இருந்தால், மிகவும் நல்லது. கதவில், பாதுகாப்பு சங்கிலி பொருத்த வேண்டும். கதவில் கண்டிப்பாக உள்ளிருந்து வெளியே பார்க்கும் வகையிலான 'லென்ஸ்' பொருத்தப்பட வேண்டும்.பூட்டிய வீட்டுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால், எச்சரிக்கும் வகையில் அலாரம் பொருத்துவது நல்லது. அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்புக்காக, பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். குடியிருப்பில் தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.வேலைக்காரர்களின் விபரம், அவர்கள் முன்பு வேலை செய்த இடத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரித்து வைப்பது சிறந்தது.அவர்களது புகைப்படத்தை சேகரிக்க வேண்டும். காஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால் இவற்றைக் கொண்டு வரும் நபர்கள் மீது, சரியான கவனம் செலுத்த வேண்டும். அவர்களை பற்றிய விவரங்கள் தெரிந்திருப்பது நல்லது. வீட்டை பூட்டி வெளியூர் செல்ல நேர்ந்தால், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை பார்க்க வருபவர்களுக்காக, பார்வையாளர் குறிப்பேடு பராமரித்தல் வேண்டும்.பகலில், 'ஏசி' பழுது பார்க்க, மற்ற மின் சாதனங்கள் பழுது பார்க்க மெக்கானிக் வரும் சமயத்தில், ஆண்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக கூறி கொண்டுவரும் நபர்களிடம், நகைகளை கொடுக்க வேண்டாம்.அவர்கள் பாலீஷ் போடுவதாக கொண்டுவரும் அமிலம், நகையை கரைக்க கூடியது. அதுபோன்ற நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X