பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சு... 3வது முறையும் போச்சு: ஜவுளி உற்பத்தியாளர்கள் 'கப்சிப்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சோமனுார்:ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளாததால், விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 95 சதவீத விசைத்தறிகள், கூலியின் அடிப்படையில்இயக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குஒரு முறை புதியகூலிஉயர்வு ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட்டு வந்தது. 2014ல் கடைசியாக புதிய கூலி ஒப்பந்தம் முடிவானது. ஆனால், அந்த ஒப்பந்தப்படி

சோமனுார்:ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளாததால், விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 95 சதவீத விசைத்தறிகள், கூலியின் அடிப்படையில்இயக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குஒரு முறை புதியகூலிஉயர்வு ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட்டு வந்தது. 2014ல் கடைசியாக புதிய கூலி ஒப்பந்தம் முடிவானது. ஆனால், அந்த ஒப்பந்தப்படி கூட, கூலி கிடைக்காததால், விசைத்தறியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். கூலியை உயர்த்தி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டதால், புதிய கூலி உயர்வு வேண்டும் என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். அதை தொடர்ந்து, கோவை, திருப்பூர் தொழிலாளர் நலத்துறைஅலுவலகத்தில், தலா இரு முறை, அதிகாரிகள் முன்னிலையில் கூலி உயர்வு குறித்து பேச கூட்டம் நடத்தப்பட்டன.இவற்றில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனர். இந்நிலையில், கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முன்னிலையில், மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.வழக்கம் போல், விசைத்தறியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையை தேதி குறிப்பிடாமல், அதிகாரிகள் ஒத்தி வைத்துள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து புறக்கணிப்பது குறித்து, கலெக்டருக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X