பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணிவதே பாதுகாப்பு: ரயில்வே போலீஸ் 'அட்வைஸ்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரயில்வே போலீசார், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழலில், ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே போலீஸ் சார்பில், ரயில் பயணிகளுக்கு கொரோனா
 'மாஸ்க்' அணிவதே பாதுகாப்பு: ரயில்வே போலீஸ் 'அட்வைஸ்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ரயில்வே போலீசார், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழலில், ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே போலீஸ் சார்பில், ரயில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம், ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.அதில், முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கியதுடன், மரக்கன்றும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில்வே போலீசார், ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.ரயில்வே போலீசார் கூறியதாவது:கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழலில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முழுமையாக கொரோனா நீங்கும் வரை, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.முகக்கவசம் அணிவதே பாதுகாப்பு. சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்த்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும், என, பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X