பொது செய்தி

தமிழ்நாடு

பரம்பிக்குளத்துக்கு நீர் திறப்பு :சோலையாறில் சரியும் மட்டம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், பருவமழை பெய்ததால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த மாதம், 23ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.கடந்த சில நாட்களாக, வால்பாறையில் பருவமழை பொழிவு குறைந்து வருவதால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து வருகிறது. சோலையாறு அணையில் இருந்து, பரம்பிக்குளம் அணைக்கு
 பரம்பிக்குளத்துக்கு நீர் திறப்பு :சோலையாறில் சரியும் மட்டம்

வால்பாறை:வால்பாறையில், பருவமழை பெய்ததால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த மாதம், 23ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.கடந்த சில நாட்களாக, வால்பாறையில் பருவமழை பொழிவு குறைந்து வருவதால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து வருகிறது. சோலையாறு அணையில் இருந்து, பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு பின், நேற்று காலை, 158.93 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு, 800 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,200 கனஅடி தண்ணீர் வீதம், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X