பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி திட்டசாலை அமையணும்: நகர மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உடுமலை;போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகர எல்லையில், அமைக்க திட்டமிடப்பட்ட திட்ட சாலை பணிகளை உடனடியாக துவக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல்வேறு திட்டச்சாலைகளை உருவாக்க, நகராட்சி சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், திட்டமிடப்பட்டது.இதற்காக சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்பு

உடுமலை;போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகர எல்லையில், அமைக்க திட்டமிடப்பட்ட திட்ட சாலை பணிகளை உடனடியாக துவக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல்வேறு திட்டச்சாலைகளை உருவாக்க, நகராட்சி சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், திட்டமிடப்பட்டது.இதற்காக சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உட்பட பணிகளை மேற்கொண்டனர். கொழுமம் ரோட்டிலிருந்து அரசு கலைக்கல்லுாரி வழியாக செல்லும் வகையில், நகர ஊரமைப்புத்துறையின் வாயிலாக, தயாரிக்கப்பட்ட, 60 அடி திட்ட சாலை அமைக்க, திட்டமிடப்பட்டது.இந்த திட்டச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், மூணாறு, மறையூர், திருமூர்த்திமலை, அமராவதி போன்ற பகுதிகளுக்குச்செல்லும் வாகனங்கள் நகருக்குள் வருவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த திட்டச்சாலை பணிக்காக, ஒரு ஏக்கரை, தனியார், நகராட்சிக்கு தானமாக வழங்கினர். மேலும், திட்டமிடப்பட்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.அதோடு பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு, அனைத்து வாகனங்களும் நகருக்குள் நுழைந்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது. கிடப்பில் போடப்பட்ட திட்ட சாலை பணிகளை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X