பொது செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்ப்பு திட்டம்: பழங்குடியினர் எதிர்பார்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உடுமலை:மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியினருக்கு, இலவச நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன.இந்த வனப்பகுதியில், பழங்குடியினர் வசிக்கும், 36 'செட்டில்மென்ட்' பகுதிகள்

உடுமலை:மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியினருக்கு, இலவச நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன.இந்த வனப்பகுதியில், பழங்குடியினர் வசிக்கும், 36 'செட்டில்மென்ட்' பகுதிகள் உள்ளன.பெரும்பாலானவர்கள் காடர், எரவாளர், புலையர், முதுவர், மலைமலசார் மற்றும் மலசார் இனத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். புலிகள் பாதுகாப்புச்சட்டம் காரணமாக, அங்குள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், செய்து தரப்படாத நிலை உள்ளது.அதேநேரம், சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை, மின் இணைப்பு நீங்கலாக, இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.தவிர, சிறுவனப்பொருட்கள் சேகரிப்புக்கு தடையுள்ளதால், செட்டில்மென்ட் அடுத்த நிலப்பகுதியிலேயே, விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.தற்போது, கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், இலவச நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசால், கால்நடைத்துறையில், எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியானால் மட்டுமே அதனை பொறுத்து செட்டில்மென்ட் பகுதிகளில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X