பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரோடு சேதம்; ரூ.43 லட்சம் பிடித்தம்: நகராட்சி கமிஷனர் தகவல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;''பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக புதியதாக போடப்பட்ட ரோடுகள் தோண்டப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக, 43 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 170.22 கோடி ரூபாய் நிதியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. பணிகள்

பொள்ளாச்சி;''பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக புதியதாக போடப்பட்ட ரோடுகள் தோண்டப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக, 43 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 170.22 கோடி ரூபாய் நிதியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் முடிவடைந்த பகுதிகளில், தார் ரோடுகள் போடப்படுகின்றன. இவை, பாதாள சாக்கடை பணிக்காக மீண்டும் தோண்டப்படுவதால் ரோடு சேதமடைகிறது.இது போன்று, குடிநீர் குழாய் சேதப்படுத்துதல் போன்றவையும் நடக்கிறது. ஒப்பந்தாரர் பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணிப்பு செய்யாததால், இதுபோன்று பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுகிறது.பாதாள சாக்கடை பணிக்காக புதிய ரோடுகள் தோண்டப்படுவதை நகராட்சி அதிகாரிகள் சீரமைக்கின்றனர். இதற்கான நிதி, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கப்படும் பட்டியல் தொகையில் பிடித்தம் செய்யப்படும், என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், குடிநீர் வடிகால்வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம், 164.98 கி.மீ.,க்கு கழிவுநீர் குழாய்களும், 7,400 மனித ஆய்வு குழிகளும், 18 கழிவு நீரேற்று நிலையங்கள், மூன்று கழிவுநீர் உந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், 17.14 கி.மீ., துாரம் பம்பிங் குழாய்களும், 11.25 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாட்டு சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டப்பணிகள் அனைத்தும், வரும், 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள, 20ஆயிரம் வீட்டு இணைப்பில் இதுவரை, 2,293 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திட்டப்பணிகள் முடிவடைந்த இடங்களில் குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து, கடிதம் பெறப்பட்டு அதன் பின் ரோடு புதுப்பிக்கப்படுகிறது.ஆனால், புதியதாக ரோடு போடப்பட்ட இடங்களில், மீண்டும் பாதாள சாக்கடை பணிக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு, புதிய ரோடு சேதப்படுத்திய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக, 43 லட்சம் ரூபாய் வரை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கப்படும் பட்டியல் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X