கிராமங்களில் மறையும் நூலகங்கள்! வாசிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் மறையும் நூலகங்கள்! வாசிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பு

Added : ஆக 27, 2021
Share
உடுமலை;உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், கடந்த, 2006-07ம் ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் கீழ், ஊராட்சி வாரியாக நுாலகங்கள் திறக்கப்பட்டன. நுாலக கட்டடத்திற்கு 4 லட்ச ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரம் புத்தகங்கள், அலமாரி வழங்கப்பட்டது.நுாலகர்களாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாதம், 750 ரூபாய் ஊக்கத்தொகை அடிப்படையில்,

உடுமலை;உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில், கடந்த, 2006-07ம் ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் கீழ், ஊராட்சி வாரியாக நுாலகங்கள் திறக்கப்பட்டன. நுாலக கட்டடத்திற்கு 4 லட்ச ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரம் புத்தகங்கள், அலமாரி வழங்கப்பட்டது.நுாலகர்களாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாதம், 750 ரூபாய் ஊக்கத்தொகை அடிப்படையில், நியமிக்கப்பட்டனர்.உடுமலை ஒன்றியத்திலுள்ள 38; குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளிலும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவங்கப்பட்டன.நிதி ஒதுக்கீடு இல்லாதது உட்பட காரணங்களால், படிப்படியாக நுாலகங்கள் மூடப்பட்டன. செயல்பாட்டில் இருந்த நுாலகங்களுக்கும், புதிதாக புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல், பூட்டப்பட்ட நுாலக கட்டடங்கள், திறந்த வெளி 'பாராக' பயன்பட்டு வருகின்றன.சில கட்டடங்களை ஊராட்சி நிர்வாகங்கள் சிமென்ட் குடோனாகவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சில கிராமங்களில், கட்டடம் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதமடைந்துள்ளது. இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி வீணாகியுள்ளது. இதற்கு தீர்வாக, இந்த நுாலகங்களை, பொது நுாலகத்துறையுடன் இணைக்க வேண்டும்.அல்லது உடனடியாக, நுாலக கட்டடங்களை புதுப்பித்து, நாளிதழ் மற்றும் புதிய புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும். இதனால், கிராமங்களில், வாசிப்பு திறன் மேம்படுவதுடன், போட்டித்தேர்வுக்கு தயாராகும், இளைஞர்களும் பயன்பெறுவர்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நுாலக கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X