சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியை சிறைபிடித்த மக்கள்: ரூ.54 ஆயிரம் அபராதம் விதிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கூடுதல் கருங்கல் பாரத்துடன், கிராம சாலையில் சென்ற டிப்பர் லாரியை, மக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரிக்கு, தாலுகா போலீசார், 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் முத்துார், தேவம்பாடிவலசு கிராமங்களில் செயல்படும் கருங்கல் குவாரிகள், கிரஷர்களில் இருந்து, கூடுதல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரிகள், கிராமங்கள் வழியே செல்வது
 லாரியை சிறைபிடித்த மக்கள்: ரூ.54 ஆயிரம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி:கூடுதல் கருங்கல் பாரத்துடன், கிராம சாலையில் சென்ற டிப்பர் லாரியை, மக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரிக்கு, தாலுகா போலீசார், 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் முத்துார், தேவம்பாடிவலசு கிராமங்களில் செயல்படும் கருங்கல் குவாரிகள், கிரஷர்களில் இருந்து, கூடுதல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரிகள், கிராமங்கள் வழியே செல்வது அதிகரித்துள்ளது.ரோடு பழுது காரணமாக, அதிருப்தி அடையும் விவசாயிகள், பொதுமக்கள் அவ்வப்போது, லாரிகளை சிறைபிடித்து போலீசிலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஒப்படைக்கின்றனர். நேற்று காலை, கேரளா செல்லும் வழியில், தாளக்கரை பகுதிக்கு கூடுதல் பாரம் ஏற்றிய நான்கு லாரிகளை, விவசாயிகள், கிராம மக்கள் சிறை பிடித்து, பொள்ளாச்சி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில், கூடுதல் பாரத்துடன் சிறைபிடிக்கப்பட்ட ஒரு லாரிக்கு மட்டும், 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வருவாய்துறையினர் கூடுதல் விசாரணை செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X