பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: நேற்று முதல் கலந்தாய்வு துவங்கியது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 14 இளநிலைப் பட்டப்படிப்புகள், 10 முதுநிலை பட்டப்படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 2021-22ம் கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, நேற்று துவங்கியது.முதல் கட்ட கலந்தாய்வில், சிறப்பு பிரிவு
 அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: நேற்று முதல் கலந்தாய்வு துவங்கியது

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 14 இளநிலைப் பட்டப்படிப்புகள், 10 முதுநிலை பட்டப்படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 2021-22ம் கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, நேற்று துவங்கியது.

முதல் கட்ட கலந்தாய்வில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடந்தது. கல்லுாரி முதல்வர் தலைமையிலான குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து, சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினர்.அதன்படி, 7 மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேசிய மாணவர் படையைச்சேர்ந்த ஒருவர், 18 விளையாட்டுத்துறை பிரிவைச்சேர்ந்த மாணவர்கள் என, 26 பேர், பல்வேறு இளநிலைப்பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர்.கல்லுாரி முதல்வர் கல்யாணி கூறியதாவது:இன்று (27ம் தேதி), பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில், கலை மற்றும் வணிகவியல் பிரிவுகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பர். காலை, 9:30 மணிக்கு, தரவரிசைப் பட்டியலில், ஒன்று முதல் 250 இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும்; மதியம், 1:30 மணிக்கு தரவரிசைப் பட்டியலில், 251 முதல், 500 வரை இடம் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.தரவரிசை 500க்கும் மேல் இடம் பெற்ற மாணவர்கள், அடுத்தகட்ட கலந்தாய்வு அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.பொள்ளாச்சிபொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, விண்ணப்ப படிவங்கள், 'ஆன்லைன்' வாயிலாக பெறப்பட்டன. இதில், 1,712 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.தர வரிசைபட்டியல், 24ம் தேதி வெளியிடப்பட்டது. நேற்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொ) ராஜ்குமார் தலைமை வகித்தார். துறை பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டனர்.மாற்றுத்திறனாளி மாணவர்கள் - 4, தேசிய மாணவர் படை - 1, விளையாட்டுப்பிரிவு - 9, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் - 1 என மொத்தம், 15 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் கூறியதாவது: பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,) உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுக்கும், 60 மாணவர்கள் வீதம், 300 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டதால், அனைத்து இடங்களும் பூர்த்தி செய்ய முடியும். இதனால், மாணவர்கள் பயன்பெற முடியும்.நாளை (இன்று) முதல் இரு நாட்களுக்கு, வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத் துறைக்கு கலந்தாய்வு நடக்கிறது. 31ம் தேதி கணிதத்துறைக்கும், செப்., 1ம் தேதி ஆங்கிலத்துறைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வால்பாறையிலும் துவக்கம்
தமிழகத்தில் செப். 1 முதல் கல்லுாரிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து, வால்பாறை அரசு கல்லுாரியில், நேற்று முதல், முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவர்கள், பள்ளி சான்றிதழ்களை வழங்கி, விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்தனர்.கல்லுாரி முதல்வர் முரளிதரன் கூறுகையில், ''இளங்கலை முதலாமாண்டில், மொத்தம் உள்ள ஒன்பது பாடப்பிரிவுகளில் படிக்க, 520 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, செப்., 2ம் தேதி வரை கல்லுாரியில் நேரடி சேர்க்கை நடக்கும்,'' என்றார்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X