பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்: பெற்றோர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார அரசுப் பள்ளிகளில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மாணவர்களின் பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து ஊசி செலுத்தப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், புரவிபாளையம், மண்ணுார் ராமநாதபுரம், நெகமம்; தெற்கு ஒன்றியத்தில், கோமங்கலம்புதுார், சிங்கநல்லுார், தொண்டாமுத்துார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார அரசுப் பள்ளிகளில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, மாணவர்களின் பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து ஊசி செலுத்தப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், புரவிபாளையம், மண்ணுார் ராமநாதபுரம், நெகமம்; தெற்கு ஒன்றியத்தில், கோமங்கலம்புதுார், சிங்கநல்லுார், தொண்டாமுத்துார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.அவற்றில் புரவிபாளையம், ராமநாதபுரம், நெகமம் பள்ளிகளுக்கு, 250 'டோஸ்'; மற்ற பள்ளிகளுக்கு தலா, 200 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. தவிர, அனைத்து முகாம்களுக்கும் தலா, 50 'டோஸ்' கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கப்பட்டது.இந்த முகாம்களில், அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து ஊசி செலுத்தப்பட்டது. அதன் பின், பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.* கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, வடசித்துார், சேரிபாளையம், காளியண்ணன்புதுார், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்த நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், கோவிஷீல்டு, 250 'டோஸ்', கோவாக்சின் 50 'டோஸ்' வீதம் செலுத்தப்பட்டன.நல்லட்டிபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா மேற்பார்வையில் நடந்த முகாமில், நல்லட்டிபாளையம், வடசித்துார் மற்றும் சொக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.நெகமம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால், நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X