பொது செய்தி

தமிழ்நாடு

கவிமணி விருதுக்கு வித்திட்ட விழா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, கவிமணி விருதுக்கு, 'எழுதுக' அமைப்பு நடத்திய நுால் வெளியீட்டு விழா காரணமாக அமைந்த தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, 'எழுதுக' இயக்கத்தின் ஆலோசகர் விஜயகிருஷ்ணன் கூறியதாவது:மாணவர்களுக்கு, வாசிப்பு, எழுத்து குறித்து பயிற்சி அளித்தோம். தமிழகம் முழுதும், 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மறைந்த ஜனாதிபதி

சென்னை:தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, கவிமணி விருதுக்கு, 'எழுதுக' அமைப்பு நடத்திய நுால் வெளியீட்டு விழா காரணமாக அமைந்த தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, 'எழுதுக' இயக்கத்தின் ஆலோசகர் விஜயகிருஷ்ணன் கூறியதாவது:மாணவர்களுக்கு, வாசிப்பு, எழுத்து குறித்து பயிற்சி அளித்தோம். தமிழகம் முழுதும், 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றிய புத்தங்களை எழுத வைத்தோம்.நுால்களை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார். அவரிடம், மாணவர்களின் திறமையை, அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.அதன் தொடர்ச்சியாக, நேற்று குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களில், சிறந்த மூவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ், கேடயத்துடன், 'கவிமணி விருது' வழங்கப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X