சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அன்னுார்:லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கையும் களவுமாக பிடிபட்டார்.கோவை சரவணம்பட்டியில், ஆயில் ஸ்டோர் வைத்துள்ளவர் ஐயப்பன். வாகனங்களில் பயன்படுத்திய இன்ஜின் ஆயிலை விற்பனை செய்துள்ளார். இவரிடம் கீரணத்தம் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்பு பிரிவின் போலீஸ் ஏட்டு ராஜ்குமார், 40, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மாதம் 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்
 கோவையில் லஞ்சம் வாங்கிய  எஸ்.ஐ., ஏட்டு கைது

அன்னுார்:லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கையும் களவுமாக பிடிபட்டார்.கோவை சரவணம்பட்டியில், ஆயில் ஸ்டோர் வைத்துள்ளவர் ஐயப்பன். வாகனங்களில் பயன்படுத்திய இன்ஜின் ஆயிலை விற்பனை செய்துள்ளார். இவரிடம் கீரணத்தம் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்பு பிரிவின் போலீஸ் ஏட்டு ராஜ்குமார், 40, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மாதம் 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐயப்பன் தகவல் தெரிவித்தார். நேற்று மாலை ஐயப்பன், குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தில், ஏட்டு ராஜ்குமாரிடம், ரசாயனம் தடவிய, 2,000 ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கே எஸ்.ஐ., இருளப்பனும் இருந்தார்.அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா, இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார், லஞ்சம் வாங்கிய ராஜ்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ., இருளப்பனையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X