சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:கோவை அருகே, இரண்டு குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவரது மனைவி தன்கலா, 22. இவர்களுக்கு மூன்று வயதில் மகள், ஒரு வயதில் மகன் இருந்தனர்.கோவை குப்பனுாரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, அருகில் உள்ள மாட்டு பண்ணையில் வேலை செய்தனர்.நேற்று காலை வழக்கம்போல, பணிக்கு செல்ல தன்கலாவை
 2 குழந்தைகளுடன்  தாய் தற்கொலை

தொண்டாமுத்துார்:கோவை அருகே, இரண்டு குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவரது மனைவி தன்கலா, 22. இவர்களுக்கு மூன்று வயதில் மகள், ஒரு வயதில் மகன் இருந்தனர்.கோவை குப்பனுாரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, அருகில் உள்ள மாட்டு பண்ணையில் வேலை செய்தனர்.நேற்று காலை வழக்கம்போல, பணிக்கு செல்ல தன்கலாவை ராஜ்குமார் அழைத்துள்ளார். அப்போது, தன்கலா தனக்கு தலை வலிப்பதாக கூறியுள்ளார். பகல், 12:00 மணிக்கு, ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்புறமுள்ள ஜன்னல் கண்ணாடியை, உடைத்து உள்ள பார்த்தபோது, தன்கலா மற்றும் இரு குழந்தைகள் துாக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். பேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பேரூர் டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர், விசாரித்தனர். மூவரின் சடலங்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X