சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாடகை செலுத்தாத 500 கடைகளுக்கு நோட்டீஸ்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுார் மாநகாராட்சியில், வாடகை செலுத்தாத 500 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.வேலுார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகள் உள்ளன. தினமும் 700 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகின்றது. மாநகராட்சியின் முக்கிய வருவாயாக விளங்கும் இந்த கடை வாடகையை நிறைய பேர் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய்



வேலுார் : வேலுார் மாநகாராட்சியில், வாடகை செலுத்தாத 500 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

வேலுார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகள் உள்ளன. தினமும் 700 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகின்றது. மாநகராட்சியின் முக்கிய வருவாயாக விளங்கும் இந்த கடை வாடகையை நிறைய பேர் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் குறைந்துள்ளது. இதையடுத்து வாடகை பாக்கி வைத்துள்ள கடை விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் இருந்து வாடகை பாக்கியாக 120 கோடி ரூபாய் உள்ளது. முதல் கட்டமாக பல ஆண்டுகள் வாடகை செலுத்தாத 500 பேருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15 நாளில் வாடகை பணத்தை செலுத்தாவிட்டால் கடை பூட்டி சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X