பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 4 மாதங்களு க்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுாரில், 4 மாதங்களுக்கு பிறகு இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டது.கொரோனா இரண்டாவது அலை பரவில் காரணமாக கடந்த ஏப்., 24 ம் தேதி முதல் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கடந்த 23 ம் தேதி முதல் அனுமதி அளித்தது. ஆனால் தியேட்டர்களில் துாய்மை பணிகள் நடந்து வருவதால் வரும் 27 ம் தேதி முதல்
வேலூரில் 4 மாதங்களு க்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு



வேலுார் : வேலுாரில், 4 மாதங்களுக்கு பிறகு இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை பரவில் காரணமாக கடந்த ஏப்., 24 ம் தேதி முதல் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கடந்த 23 ம் தேதி முதல் அனுமதி அளித்தது. ஆனால் தியேட்டர்களில் துாய்மை பணிகள் நடந்து வருவதால் வரும் 27 ம் தேதி முதல் திறக்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று சினிமா தியேட்டர்கள் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

இது குறித்து சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது: வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மவட்டங்களில் 50 தியேட்டர்களில் 89 திரைகள் உள்ளன. 50 சதவீதம் பார்வையாளர்களுடன் இன்று 40 தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர் ஊழியர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு காட்சிக்கும் இருக்கை சுத்தம் செய்யப்படுகிறது. சினிமா பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுக்கப்படுகிறது. வெப்ப பரிசோதனை செய்த பிறகு கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். புதிய படங்கள் வெளிவராததால், ஹாலிவூட் ஆங்கில படங்கள் திரையிடப்படுகின்றது. பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. தினசரி தியேட்டர் செலவுக்கு இது கட்டுப்படியாகாதது. அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X