சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ் - லாரி மோதல்: டிரைவர் பலி; 4 பேர் காயம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தேனி: தேனியில் ஆம்னி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. ஆம்னி பஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர் உள்பட 4பேர் பலத்த காயமடைந்தனர். சென்னையில் இருந்து பயணிகளுடன் தேனி மாவட்டம் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு - உப்பார்பட்டி விலக்கு பகுதியில் இன்று காலையில் எதிரே வந்த ஈச்சர் லாரி மீது நேருக்கு நேர் மோதி



தேனி: தேனியில் ஆம்னி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. ஆம்னி பஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர் உள்பட 4பேர் பலத்த காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து பயணிகளுடன் தேனி மாவட்டம் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு - உப்பார்பட்டி விலக்கு பகுதியில் இன்று காலையில் எதிரே வந்த ஈச்சர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ் ஓட்டுநரான தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காங்கேயம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி உள்ளார். மேலும் ஆம்னி பேருந்தில் வந்த அனுமந்தன்பட்டி மதன், இராயப்பன்பட்டி ஹர்ஷன் மற்றும் லாரியில் வந்த காங்கேயம் பிரேம்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை தீயணைப்பு மற்றும் 108பணியாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X