குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை உருவாக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை உருவாக்கம்

Added : ஆக 27, 2021
Share
சென்னை : சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது பேசியதாவது:மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட புத்தாநத்தம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளி கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள நுாலகங்களை திறக்க வேண்டும். வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நிலையை எட்ட வேண்டும்.தி.மு.க. ஆட்சியில் பதிவு

சென்னை : சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அப்துல்சமது பேசியதாவது:

மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட புத்தாநத்தம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளி கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள நுாலகங்களை திறக்க வேண்டும்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நிலையை எட்ட வேண்டும்.தி.மு.க. ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் 5000 ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்தது. அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. தற்போதைய தி.மு.க. அரசு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவியரிடம் தவறாக நடந்து கொள்ளும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க 'குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை' உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் தற்கொலையை தடுக்க வாழ்க்கை திறன் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.மனநல ஆலோசகர்களை பள்ளியில் நியமிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மணப்பாறை தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X