ரூ. 2.85 கோடி மோசடி: ஊராட்சி தலைவர் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை : கோவை டாக்டரிடம், 2.85 கோடி ரூபாய் மோசடி செய்த, ஊராட்சி தலைவர் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.கோவையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் மாதேஸ்வரன். மருத்துவமனை அபிவிருத்திக்கு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிகோட்டை ஊராட்சி தலைவரான பன்னீர் செல்வத்திடம் உதவி கேட்டுள்ளார்.அப்போது, 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும்,

கோவை : கோவை டாக்டரிடம், 2.85 கோடி ரூபாய் மோசடி செய்த, ஊராட்சி தலைவர் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் மாதேஸ்வரன். மருத்துவமனை அபிவிருத்திக்கு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிகோட்டை ஊராட்சி தலைவரான பன்னீர் செல்வத்திடம் உதவி கேட்டுள்ளார்.அப்போது, 100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷன் 2 கோடி ரூபாயும், ஆவண செலவுக்கு 85 லட்சம் ரூபாயும்பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட மாதேஸ்வரன், 2.85 கோடி ரூபாய்க்கு காசோலை மற்றும் ஆவணங்கள் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட பன்னீர் செல்வம், கடன் பெற்றுத்தராமல் மோசடி செய்தார். கோவை குற்றப்பிரிவு போலீசார், பன்னீர் செல்வத்தை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், பி.என்.பாளையத்தில் ராஜா என்பவரிடம், பன்னீர் செல்வம் 22.5 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி விசாரித்து, பன்னீர் செல்வத்தை பி.டி.,வாரன்டில் கைது செய்து, கோவை ஜே.எம்:7 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X