காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தேடிவந்து வேட்டையாடுவோம்: ஜோ பைடன்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (40) | |
Advertisement
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்ப மறக்க மாட்டோம் எனவும், அதற்கு காரணமானவர்களை தேடிவந்து வேட்டையாடுவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சொந்த நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பியோட முயற்சித்து வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில்
Joe Biden,  Kabul, Airport, Blasts, Attackers, ஜோ பைடன், அமெரிக்கா, காபூல், குண்டுவெடிப்பு,

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்ப மறக்க மாட்டோம் எனவும், அதற்கு காரணமானவர்களை தேடிவந்து வேட்டையாடுவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சொந்த நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பியோட முயற்சித்து வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஆக.,26) காபூல் விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில், ஆப்கானியர்கள் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


latest tamil news


இந்த தாக்குதலில், அமெரிக்க மாலுமிகள் 12 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை, ஐஎஸ் அமைப்பும் உறுதி செய்தது. காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-ஆக-202101:23:28 IST Report Abuse
Rajagopal இந்த கோடத்தாண்டி நீயும் வரப்படாது. நானும் வர மாட்டேன். அத சொல்லிட்டுப்போவதத்தான் வந்தேன்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஆக-202119:47:35 IST Report Abuse
மலரின் மகள் நவீன உலகின் தீவிரவாதம் தளைத்தோங்கவும் அது வாழையடி வாழையாக செழித்தோங்கி கொண்டே வருவதற்கும் முழு முதல் காரணங்களாக இரண்டு பெரியண்ணன்கள் இருக்கிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. உலகில் வல்லரசுகள் என்று யாரும் இருக்க கூடாது, நல்லரசுகள் தான் இருக்கவேண்டும். இவர்கள் வெளியேறினாலும் என்பது பில்லியன் டாலர் மதிப்பளிலான நவீன ஆயுதங்களை நன்கு செயல்படும் வகையில் அங்கே விட்டு செல்வது ஏன் என்று இவர்களுக்கு தெரியாதா? அவைகள் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் சென்று சேரும். சீன ரஷியாவில் அவர்கள் இனி தாக்குதல் நடத்துவதற்கு பயன்படும் என்று நினைக்கிறார்கள் போல. நாங்கள் சமாதானமாக வெகு விரைவாக வெளியேறுகிறோம். ஆயுதங்களை இனி உங்கள் எல்லையை ஒட்டியுள்ள மற்றும் அருகாமையில் இருக்கும் தேசங்களுக்கு எதிராகவும் உங்கள் தேசத்திற்குள்ளாகவும் தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார்களா என்று கூட பலர் விவாதிக்கிறார்கள். அந்த பெரியண்ண தேசமும் சீனாவும் சிறு குறு தானாச்சி அதிகாரமிக்க பல தேசங்களாக மாறினால் சிறப்பாக இருக்கும் என்று ஊடக உளவியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் போல. ஒன்றுமே புரியவில்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-ஆக-202119:01:49 IST Report Abuse
Anand கிழிச்சே நீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X