எல்.ஐ.சி., தொகை ரயில்வே போலீஸ் புலம்பல் 

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை : கடந்த சில மாதங்களாக ரயில்வே போலீசாரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் எல்.ஐ.சி., தொகை, முறையாக அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும், ஆறு மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்ட தொகை மட்டுமே கணக்கில் காட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.ரயில்வே போலீசார் கூறியதாவது:கடந்தாண்டு அக்., மாதம் வரை மட்டுமே எல்.ஐ.சி., கணக்கில் வரவு காட்டப்பட்டது. இதுகுறித்து

கோவை : கடந்த சில மாதங்களாக ரயில்வே போலீசாரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் எல்.ஐ.சி., தொகை, முறையாக அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும், ஆறு மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்ட தொகை மட்டுமே கணக்கில் காட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
ரயில்வே போலீசார் கூறியதாவது:

கடந்தாண்டு அக்., மாதம் வரை மட்டுமே எல்.ஐ.சி., கணக்கில் வரவு காட்டப்பட்டது. இதுகுறித்து கேட்டபின், தற்போது பிப்., மாதம் வரை கணக்கு வரவு வைக்கப்பட்டு உள்ளது. அதன்பின், ஆக., மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை எல்.ஐ.சி., கணக்கில் சேரவில்லை. இவ்வாறு நான்கு மாதங்கள், ஆறு மாதங்கள் கழித்து எங்கள் தொகையை செலுத்துகின்றனர்.குறிப்பிட்ட நாளை கடந்து தவணை தொகை கட்டினால், பாலிசி ரத்தாக வாய்ப்புள்ளது. இதனால், இத்தனை ஆண்டுகள் பணம் செலுத்தியும், இவர்கள் செய்யும் கால தாமதத்தால் எங்களுக்கு தான் இழப்பு ஏற்படும். எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் இருந்தால், அந்த தொகையை நாங்களே உரிய முறையில் செலுத்தி கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X