சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை கடத்தி 'காமெடி' கெஞ்சிய கும்பலில் 3 பேர் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுார் அருகே, 2 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய தொழிலாளியை, 10 ஆயிரம் ரூபாய் பெற்று விடுவித்த கும்பலில் மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் திருமலை, 27. வேலுார், அணைக்கட்டை அடுத்த ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம், 28 இருவரும் கோவையில் நுாற்பாலையில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.விடுமுறைக்கு ஊருக்கு வந்தனர். நேற்று முன்தினம்

வேலுார் : வேலுார் அருகே, 2 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய தொழிலாளியை, 10 ஆயிரம் ரூபாய் பெற்று விடுவித்த கும்பலில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் திருமலை, 27. வேலுார், அணைக்கட்டை அடுத்த ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம், 28 இருவரும் கோவையில் நுாற்பாலையில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.விடுமுறைக்கு ஊருக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் ஓங்கப்பாடி டாஸ்மாக் கடையில் மது குடித்தனர்.அப்போது காரில் வந்த கும்பல் திருமலையை கடத்தி, அவரது வீட்டுக்கு போன் செய்து 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக கூறியுள்ளனர்.

'பணமில்லை என, திருமலை மனைவி கண்ணம்மா, கூலாக கூறவே' அதிர்ச்சியடைந்த கும்பல், உடன் இருந்த சந்தானத்தை தொடர்பு கொண்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி, 10 ஆயிரம் ரூபாய் தந்தால் விட்டு விடுவதாக கெஞ்சியது.மேல்மொணவூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே, பணத்துடன் வந்தால் திருமலையை விட்டு விடுவதாக கூறியது.வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்த சந்தானம், நேற்று அதிகாலை, மேல்மொணவூருக்கு பணத்துடன் சென்றார்.

கும்பலை சேர்ந்த ஏழு பேர், 10 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திருமலையை விடுவித்து தப்பியோட முயன்றனர். அப்போது மறைந்திருந்த போலீசார் விரட்டினர். இதில் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த சதீஷ், 23, பிரவீன், 24, சீனிவாசன், 25 சிக்கினர்.மற்ற நால்வர் தப்பி விட்டனர். 'உள்ளத்தை அள்ளித்தா' சினிமா பட பாணியில், கடத்தல் கும்பல் பணம் கேட்டு கெஞ்சல் பேரம் நடத்தி, போலீசிடம் சிக்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X