சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரியை கைது செய்ய தடை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுடில்லி : சத்தீஸ்கரில் தேச துரோக குற்றச்சாட்டில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. இங்கு மூத்த போலீஸ் அதிகாரி குர்ஜின்தர் பால் சிங் மீது தேச துரோக செயல் சொத்து குவிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் இரு வழக்குகள் பதிவு


புதுடில்லி : சத்தீஸ்கரில் தேச துரோக குற்றச்சாட்டில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. இங்கு மூத்த போலீஸ் அதிகாரி குர்ஜின்தர் பால் சிங் மீது தேச துரோக செயல் சொத்து குவிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சிக்கு சாதகமாகவே போலீசார் எப்போதும் செயல்படுகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அதிகாரத்திற்கு வந்த பின் முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கமாக விட்டது.இது நம் நாட்டில் மிகப் பெரிய தொல்லையாக உள்ளது. இதற்கு போலீசாரும் காரணம்.
இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த இரு வழக்குகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி குர்ஜின்தர் பால் சிங்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X