' தொழில்நுட்ப வளர்ச்சியை சட்டம் அங்கீகரிக்க வேண்டும்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கொச்சி : 'சமூக தேவைகளுக்காக மாற்றி அமைக்கப்படும் சட்டங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்று அவற்றை அங்கீகரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்' என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கேரளாவில் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகாமல் மணமகன் மற்றும் மணமகளும் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு அனுமதி

கொச்சி : 'சமூக தேவைகளுக்காக மாற்றி அமைக்கப்படும் சட்டங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்று அவற்றை அங்கீகரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்' என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகாமல் மணமகன் மற்றும் மணமகளும் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த கோரிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இது தொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி அறிவித்தார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவின் முழு விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அப்போது நீதிபதி கூறியதாவது:
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை சிறப்பு திருமண சட்டத்தின் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் என கூறுவது தவறு. சமூக தேவைகளுக்காக மட்டும் சட்டத்தை மாற்றி அமைக்கக்கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்று அவற்றை அங்கீகரிக்கும் வகையிலும் அந்த சட்டங்கள் இருக்க வேண்டும்.குற்ற வழக்கில் உள்ள சாட்சியங்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அப்படி இருக்க வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திருமணம் செய்துகொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படாதது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X