கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாட்சி அளிக்க ஆஜராகாத பெண் எஸ்.பி.,க்கு 'பிடிவாரன்ட்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை : தி.மு.க., முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில், சாட்சி அளிக்க ஆஜராகாத பெண் எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.தி.மு.க., ஆட்சி காலத்தில், 2001--2006 ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலுார் பழனிசாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து

கோவை : தி.மு.க., முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில், சாட்சி அளிக்க ஆஜராகாத பெண் எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சி காலத்தில், 2001--2006 ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலுார் பழனிசாமி. வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், விசாரணை அதிகாரியான, அப்போதைய லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா, கோர்ட்டில் ஆஜராகி சாட்சியளிக்க பல முறை சம்மன் அனுப்பபட்டது.

கோர்ட்டில் ஆஜராகி சாட்சியளிக்காமல் தொடர்ந்து வாய்தா கேட்டு மனு தாக்கல் செய்து வந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சண்முகபிரியா கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக இயலாத காரணம் குறித்து, அரசு தரப்பு வக்கீல் ராமானுஜம் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி சக்திவேல், 'விசாரணை அதிகாரி சாட்சியளிக்க, தொடர்ந்து அவகாசம் அளிக்கப்பட்டும் ஆஜராகாமல் இருப்பதால் அவருக்கு பிணையில் வரக்கூடிய, 'பிடி வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார். செப்., 16 க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சண்முகபிரியா தற்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X