300 ஆண்டு பழமையான கல் உரல் கண்டுபிடிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே 300 ஆண்டுகளுக்கு முன், எண்‍ணெய் ஆட்ட பயன்படுத்திய கல் உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இலகம்பதி கிராமம் உள்ளது. அங்கு, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:இலகம்பதியில், 500 ஆண்டுகளுக்கு
 300 ஆண்டு பழமையான  கல் உரல் கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே 300 ஆண்டுகளுக்கு முன், எண்‍ணெய் ஆட்ட பயன்படுத்திய கல் உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இலகம்பதி கிராமம் உள்ளது. அங்கு, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

இலகம்பதியில், 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெருமாள் கோவிலை ஆய்வு செய்தபோது, பூதேவி சிலை ஒன்று பாதி மண்ணில் புதைந்திருந்தது. மேலும், அந்த இடத்தில் எண்ணெய் ஆட்டும் பெரிய கல் உரல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உரலின் கிழக்கு பக்கத்தில், எட்டு வரிகளை கொண்ட தமிழ் கல்வெட்டு உள்ளது.

அதை படியெடுத்ததில் அவை, 250 முதல், 300 ஆண்டுகள் பழமையானது என்றும், செக்கு உரலை, பார்த்தீப ஆண்டில், ஆடி மாதம் 3ம் தேதி இலம்பாதன் என்பவருக்காக தானமாக அளித்த செய்தியையும் கூறுகிறது. இப்பகுதி இன்றும் இலகம்பதி என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X