அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு 'நோட்டீஸ்'

Added : ஆக 27, 2021
Share
சென்னை : கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த'ஸ்மார்ட் விஷன் மற்றும் நீரிழிவு' மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டுமாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துணை கமிஷனர் டாக்டர் மனீஷ் கூறியதாவது:சென்னையைச் சேர்ந்த 42 வயது நபர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு'ஸ்மார்ட் விஷன் மற்றும் நீரிழிவு' மருத்துவமனையில்


சென்னை : கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த'ஸ்மார்ட் விஷன் மற்றும் நீரிழிவு' மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டுமாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துணை கமிஷனர் டாக்டர் மனீஷ் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்த 42 வயது நபர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு'ஸ்மார்ட் விஷன் மற்றும் நீரிழிவு' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக1 லட்சத்து 99 ஆயிரத்து807 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நோயாளியிடம் கூடுதலாக வசூலித்த தொகையை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். இதுவரை 10 மருத்துவமனைகள் 16 நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலித்தனர். அந்த மருத்துவமனைகளிடமிருந்து 18.36 லட்சம் ரூபாய் திருப்பி பெற்று தந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X