சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேய்' வீட்டில் நள்ளிரவில் பூஜை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அரக்கோணம் : அரக்கோணம் அருகே, வீட்டில் பள்ளம் தோண்டி பூஜை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை தணிகை போளூர் அருகே கிழவனத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம், 51; கிழவனத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் வசிக்கிறார். அந்த வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பூஜை நடப்பதாக போலீசாருக்கு தகவல் போனது. அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை செய்ததில்,
 'பேய்' வீட்டில் நள்ளிரவில் பூஜை


அரக்கோணம் : அரக்கோணம் அருகே, வீட்டில் பள்ளம் தோண்டி பூஜை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை தணிகை போளூர் அருகே கிழவனத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம், 51; கிழவனத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் வசிக்கிறார். அந்த வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பூஜை நடப்பதாக போலீசாருக்கு தகவல் போனது. அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை செய்ததில், பள்ளம் தோண்டிக்கொண்டிருந்த ஆசீர்வாதம் சிக்கினார்.

இதுகுறித்து போலீசாரிடம் ஆசீர்வாதம் கூறியதாவது:

லாரி டிரைவரான எனக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் ரோசியின் கணவர் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்தார். இதனால் மகளை கிழவனத்தில் உள்ள வீட்டில் குடியமர்த்த முடிவு செய்தேன். வீடு, 25 ஆண்டாக பூட்டி கிடந்ததால், பேய், பிசாசு இருப்பதாக நினைத்து சுத்தம் செய்ய யாரும் முன்வரவில்லை.

மந்திரவாதியிடம் கேட்டதற்கு, நள்ளிரவு பள்ளம் தோண்டி குழந்தையோடு பூஜை செய்தால், பேய் ஓடி விடும். அது காவல் காத்த புதையல் கிடைக்கும் என்றார். பள்ளம் தோண்டி பூஜை பொருட்களுடன் தயாராக இருங்கள்; நள்ளிரவில் ஆண் குழந்தையோடு வருவதாக கூறினார். பொருட்களோடு நான் காத்திருந்தேன். ஆனால், போலீசார் வருவதை தெரிந்து மந்திரவாதி முனியாண்டி, 65, தப்பிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆசீர்வாதத்தை போலீசார் கைது செய்தனர். நரபலிக்கா அல்லது புதையலுக்காக நடந்த சம்பவமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X