நியூயார்க்கில் ஒரே நாளில் கூடிய 12 ஆயிரம் கோவிட் இறப்புகள்: புதிய கவர்னர் காரணம்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (3)
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னராக கேத்தி ஹோகல் என்பவர் பொறுப்பேற்று 2 நாட்கள் ஆகும் நிலையில், முந்தைய கவர்னர் வெளியிட்டிருந்த கோவிட் இறப்புகளை விட புதிதாக 12 ஆயிரம் இறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் 43,400 ஆக இருந்த நியூயார்க் மாகாண பலி எண்ணிக்கை ஒரே நாளில் 55,400 ஆக அதிகரித்தது.நியூயார்க் மாகாண கவர்னராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ குவோமோ
NewYork Governor, Reveals, MoreCovid Deaths, Previously Counted, நியூயார்க், கவர்னர், கொரோனா, கோவிட், உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னராக கேத்தி ஹோகல் என்பவர் பொறுப்பேற்று 2 நாட்கள் ஆகும் நிலையில், முந்தைய கவர்னர் வெளியிட்டிருந்த கோவிட் இறப்புகளை விட புதிதாக 12 ஆயிரம் இறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் 43,400 ஆக இருந்த நியூயார்க் மாகாண பலி எண்ணிக்கை ஒரே நாளில் 55,400 ஆக அதிகரித்தது.

நியூயார்க் மாகாண கவர்னராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ குவோமோ ஆட்சியில் இருந்தார். இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது பற்றி விசாரணை நடைபெற்றது. அதில் கவர்னர் ஆண்ட்ரூ பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதாக, அட்டர்னி ஜெனரல் அரசுக்கு அறிக்கை அளித்தார்.
இதனையடுத்து ஜோ பைடன் அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். அவருக்கு பதில் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான கேத்தி ஹோகல் கவர்னராக அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 24-ம் தேதி நியூயார்க்கின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பேன் என அறிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில் நோய் தடுப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் அடிப்படையில், நியூயார்க்கில் கூடுதலாக 12 ஆயிரம் பேர் கோவிட் தாக்கி இறந்திருப்பதை வெளிப்படுத்தினார். “அவை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள். மக்கள் இரண்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகவல் சி.டி.சி., உடையது. இந்த எண்களை மறைக்க வாய்ப்பில்லை” என கவர்னர் கூறினார். 12 ஆயிரம் இறப்புகள் கூடினாலும், தேசிய அளவிலான பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கலிபோர்னியா, டெக்சாஸிற்கு பிறகு அதிக கோவிட் இறப்புகளை கொண்ட மூன்றாவது மாகாணமாகவே நியூயார்க் தொடர்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202105:22:53 IST Report Abuse
அப்புசாமி நல்லவேளை. ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம்.லிங்க்கன், கென்னடிதான் காரணம்னு சொல்லாம உண்மையை சொல்றாங்களே...
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
27-ஆக-202114:23:26 IST Report Abuse
Ramesh Sargam எல்லாவற்றிலும் வளர்ந்த நாட்டிலேயே இந்த பிரச்சினை. நமது இந்தியா எவ்வளவோ மேல். இதை புரிந்து கொள்ளாத நமது எதிர் கட்சி உறுப்பினர்கள் சதா சர்வகாலம் மோடி அரசை குறை கூறிக்கொண்டிருப்பது சரியல்ல. நம் நாட்டின் வளர்ச்சியை, வைரஸ் கையாளும் முறையை மெச்ச கற்றுக்கொள்ளவேண்டும். அல்லது வாயை மூடி கொண்டிருப்பது சாலச்சிறந்தது..
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
27-ஆக-202119:49:07 IST Report Abuse
தமிழ்வேள்இந்த கொரோனா காலத்தில் காங்கிரஸ் பதவியில் இருந்திருந்தால் , இந்தியாவின் கொரோனா சாவு எண்ணிக்கை அமெரிக்காவை விட ,மற்ற எந்த நாட்டையும் விட மிக அதிகமாக இருந்திருக்கும் .....இந்த எதிர்க்கட்சிகள் இருக்கும் வரை , இந்தியா உருப்படாது ...இவர்களை ஒழித்துக்கட்டி , இந்தியா முன்னேறுவதற்காக அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவந்து மோடிஜி அதிபர் ஆனால் மிகவும் நன்றாக இருக்கும் ..ஆனால் நல்லதெல்லாம் நடப்பதில்லையே ...என்ன செய்ய ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X