டில்லி பல்கலைக்கு ஸ்டாலின் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லி பல்கலைக்கு ஸ்டாலின் கோரிக்கை

Added : ஆக 27, 2021
Share
சென்னை : 'எழுத்தாளர் பாமா கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை டில்லி பல்கலையில் மீண்டும் சேர்க்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:டில்லி பல்கலையின் ஆங்கில பாடத் திட்டத்தில் தமிழ் எழுத்தாளர் பாமாவின் 'சங்கதி' மற்றும் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் 'கைம்மாறு என்னுடல்' ஆகிய மொழியாக்கப் படைப்புகள் இடம்


சென்னை : 'எழுத்தாளர் பாமா கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை டில்லி பல்கலையில் மீண்டும் சேர்க்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லி பல்கலையின் ஆங்கில பாடத் திட்டத்தில் தமிழ் எழுத்தாளர் பாமாவின் 'சங்கதி' மற்றும் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் 'கைம்மாறு என்னுடல்' ஆகிய மொழியாக்கப் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.அப்படைப்புகளை அத்துறை பேராசிரியர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லாமல் மேற்பார்வை குழு ஆலோசனையில் பல்கலை நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயல்.
பெண்கள் உரிமை ஒடுக்கப்பட்டோர் விடுதலை மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை பாமா சுகிர்தராணி ஆகியோர் வழங்கி வருகின்றனர். அவர்களின் எழுத்துகளை கட்சி அரசியல் மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு அவற்றை டில்லி பல்கலை பாடத் திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X