பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் நேற்று 400 இடங்களில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கர்ப்பிணியர் பாலுாட்டும் பெண்கள் காசநோயாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 80 வயதுக்கு

சென்னை : சென்னையில் நேற்று 400 இடங்களில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கர்ப்பிணியர் பாலுாட்டும் பெண்கள் காசநோயாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் வார்டுக்கு இரண்டு இடங்களில் என 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் 1600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 8:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 147 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

சென்னையில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.மக்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் இதுபோன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X