கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு: உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம்; ஐகோர்ட்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேல் விசாரணை நடத்தக்கூடாது. தாங்கள் சொல்வது போல் வாக்குமூலம் அளிக்கும்படி பல
kodanadu, கோடநாடு, கொடநாடு, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேல் விசாரணை நடத்தக்கூடாது. தாங்கள் சொல்வது போல் வாக்குமூலம் அளிக்கும்படி பல தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. ஏற்கனவே என்னிடம் விசாரணை நடத்திய நிலையில் மேல் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்;
உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளார். எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்தலாம். அதன் அடிப்படையில் ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்று கொண்டதாக தெரிவித்தார்.


latest tamil news



இதனை தொடர்ந்து நீதிபதி நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். வழக்கு தொடர்ந்தவர் புகார்தாரரோ, குற்றவாளியோ இல்லை. சாட்சி மட்டுமே. வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் . இவ்வாறு கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-202105:19:17 IST Report Abuse
rajan ஒரு 25 வருடங்கள் இப்படியே ஓட்டுங்க. அதற்குள் குற்றவாளி இறந்து விடுவான் வழக்கை விஜாரிக்கும் நீதிமான்களும் இருக்க மாட்டார்கள்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-ஆக-202114:14:40 IST Report Abuse
Visu Iyerஅட.. நல்ல ஐடியாவா இருக்கே... /// அப்ப சரி.. இனி அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து விரைவாக நீதி வழங்க ஏற்பாடு செய்ய சொல்லிட வேண்டியது தான்....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஆக-202105:01:23 IST Report Abuse
Mani . V ஒரு முதலமைச்சரின் மர்ம மரணத்தை விசாரிக்க வேகம் காட்ட முடியவில்லை. இதற்க்கு இவ்வளவு வேகம் காட்டுகிறார்கள்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-ஆக-202114:16:18 IST Report Abuse
Visu Iyerமத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த முதல்வர் ஜெயலலிதா ... அவர் மரணத்தில் மர்மம் என்றால் மத்திய அரசின் பாதுகாப்பில் குறை உள்ளது என்று சொல்றீங்க.. அப்படின்னா இந்த மரணம் பற்றி தார்மீக பொறுப்பு எடுத்துக் கொண்டு மத்திய அரசு கலைக்கப்பட வேண்டும் என்று சொல்றீங்க புரிகிறது.. இந்த மர்மம் தான் என்றால் அதை பன்னாட்டு நீதி மன்றம் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று சொல்றீங்க புரிகிறது.. அப்படின்னா.. இப்போ என்ன நடக்கும்....
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-ஆக-202121:24:50 IST Report Abuse
Dhurvesh ஒருபக்கம் கோடநாடு: இன்னொருபக்கம் பொள்ளாச்சி: 4 பேரை வளைத்த சிபிஐ: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-ஆக-202114:16:56 IST Report Abuse
Visu Iyerஇன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X