தமிழ்நாடு

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சோலாரில் செப்.,1ல் தொடங்க சாத்தியமில்லை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியில், இதுவரை மின் இணைப்பே கிடைக்காத நிலையில், திட்டமிட்டபடி செப்.,?ம் தேதி முதல், செயல்படத் தொடங்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.ஈரோடு பஸ் ஸ்டாண்டில், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதனால் தென் மாவட்ட பஸ்கள் வந்து நின்று செல்ல ஏதுவாக, சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடக்கிறது.

ஈரோடு: சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியில், இதுவரை மின் இணைப்பே கிடைக்காத நிலையில், திட்டமிட்டபடி செப்.,?ம் தேதி முதல், செயல்படத் தொடங்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


ஈரோடு பஸ் ஸ்டாண்டில், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதனால் தென் மாவட்ட பஸ்கள் வந்து நின்று செல்ல ஏதுவாக, சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடக்கிறது. செப்.,? முதல் செயல்பாட்டுக்கு வரும் வகையில், நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக சோலாரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. கழிவறை கட்ட அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. கார் ஷெட் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது. ஆனால், மின் இணைப்பு இதுவரை வழங்கவில்லை. இதற்காக ஒப்பந்ததாரர் காத்திருக்கிறார். இதனிடையே ஏற்கனவே பஸ்கள் வந்து செல்லும் இடம், கடைகள், டவுன் பஸ்கள் வந்து செல்ல கூடிய இடங்கள் திட்டமிடப்பட்டதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கி, கட்டட வரைபடத்தை இறுதி செய்தால் மட்டுமே, கட்டுமான பணி தொடங்கும். இதனால் செப்.,?ல் திட்டமிட்டபடி பஸ் ஸ்டாண்ட் செயல்படுவது சந்தேகமாகியுள்ளது. அதேசமயம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, திருப்பூர், சேலம், சென்னை செல்லும் பஸ்கள், தொடர்ந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X