மாநகரில் 4 சினிமா தியேட்டர்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் 4 சினிமா தியேட்டர்கள் திறப்பு

Added : ஆக 27, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாநகரில், நேற்று நான்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைப்படி பார்வையாளர்களை அனுமதித்தனர்.கொரோனா பரவல் ஊரடங்கு தளர்வால் கடந்த, 23 முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரில், 11 தியேட்டர், புறநகரில், 39 தியேட்டர் என, 50 தியேட்டர்கள் உள்ளன. புதுப்படம் ரிலீஸ் ஆகாததால், ஆங்கிலப்படம் மற்றும் மொழி மாற்று படங்களை தேர்வு

ஈரோடு: ஈரோடு மாநகரில், நேற்று நான்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைப்படி பார்வையாளர்களை அனுமதித்தனர்.


கொரோனா பரவல் ஊரடங்கு தளர்வால் கடந்த, 23 முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரில், 11 தியேட்டர், புறநகரில், 39 தியேட்டர் என, 50 தியேட்டர்கள் உள்ளன. புதுப்படம் ரிலீஸ் ஆகாததால், ஆங்கிலப்படம் மற்றும் மொழி மாற்று படங்களை தேர்வு செய்து, நேற்று தியேட்டர்களை திறக்க ஆயத்தமாகினர். ஈரோடு மாநகரில், 11 தியேட்டரில், அபிராமி, அண்ணா, மகாராஜா, வி.எஸ்.பி., என நான்கு தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேலு கூறியதாவது: கொரோனா பாதுகாப்பு வழிமுறைப்படி, பார்வையாளர்கள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். அதேசமயம் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று திறக்கப்பட்ட நான்கு தியேட்டரில், இரண்டில் மிகக்குறைந்த பார்வையாளர் வந்ததால், ஒரு காட்சி மட்டும் திரையிட்டு, மற்ற காட்சிகள் ரத்தானது. ஓரிரு நாளில் புதிய தமிழ் படங்கள் பெற்றதும், மாவட்டத்தில் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X