மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை

Added : ஆக 27, 2021
Share
ஈரோடு: ஈரோட்டில், தனியார் நிறுவனத்தின், மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு, முத்தம்பாளையம் பகுதி 2ல், சூரம்பட்டி அணைக்கட்டு அருகே ஸ்ரீகார்டன் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே மொபைல் போன் டவர் உள்ளது. அந்த டவருக்கு அருகே, 100 மீட்டர் இடைவெளியில் மற்றொரு

ஈரோடு: ஈரோட்டில், தனியார் நிறுவனத்தின், மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு, முத்தம்பாளையம் பகுதி 2ல், சூரம்பட்டி அணைக்கட்டு அருகே ஸ்ரீகார்டன் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே மொபைல் போன் டவர் உள்ளது. அந்த டவருக்கு அருகே, 100 மீட்டர் இடைவெளியில் மற்றொரு தனியார் மொபைல்போன் டவர் அமைக்க, நேற்று பணி நடந்தது. குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா போலீசார், மக்களிடம் பேசிய நிலையில், டவர் அமைக்கும் அலுவர்களிடம் விசாரணை நடத்தினர். தனியார் இடத்தில், 15 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், உயர்நீதிமன்ற அனுமதிப்படி டவர் அமைக்கப்படுவதாக அவர்கள் கூறினர். இதை மக்களிடம் தெரிவித்து, பணியை தடுப்பது தவறு என்றும், ஆட்சேபனை இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் போலீசார் கூறினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X