பொது செய்தி

தமிழ்நாடு

கிணறு, நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி முறையீடு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறை, முள்ளம்பட்டி அருகே, வரவங்காடு காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: வரவங்காடு காலனியில், 70 ஆண்டுக்கு மேலாக, 47 குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவரும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். கருப்பராயன் சுவாமி கோவிலை வழிபட்டு, அங்குள்ள குடிநீர் கிணற்றை பயன்படுத்துகிறோம். அங்கு ஒரு அறையில் கோவில் பூஜை பொருட்களை

ஈரோடு: பெருந்துறை, முள்ளம்பட்டி அருகே, வரவங்காடு காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: வரவங்காடு காலனியில், 70 ஆண்டுக்கு மேலாக, 47 குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவரும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். கருப்பராயன் சுவாமி கோவிலை வழிபட்டு, அங்குள்ள குடிநீர் கிணற்றை பயன்படுத்துகிறோம். அங்கு ஒரு அறையில் கோவில் பூஜை பொருட்களை வைத்து பயன்படுத்துகிறோம். எங்கள் குடியிருப்பு அருகே வசிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், பொது கிணறு, பூஜை பொருட்கள் வைப்பு அறையை நாங்கள் பயன்படுத்துவதை தடுக்கின்றனர். கிணற்றை ஆக்கிரமித்ததுடன் கோவிலை சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி கேட்டால் மிரட்டுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X