பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்போரை குண்டாஸில் கைது செய்ய வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: ''குட்கா, பான் மசாலா விற்போரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடையுங்கள்,'' என, விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும்போது, ஏற்கனவே இருந்த வியாபாரிகளுக்கு கடைகளை வழங்கிவிட்டு, மீதி

ஈரோடு: ''குட்கா, பான் மசாலா விற்போரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடையுங்கள்,'' என, விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும்போது, ஏற்கனவே இருந்த வியாபாரிகளுக்கு கடைகளை வழங்கிவிட்டு, மீதி கடைகளை மட்டுமே ஏலம் விட முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி ஈரோட்டிலும் மார்க்கெட் கடைகளை ஏற்கனவே வைத்திருந்தவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். பான் மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X