பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காட்டில் பூங்கா திறப்பு: விடுதி உரிமையாளர் மகிழ்ச்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஏற்காடு: ஏற்காட்டில் பூங்கா திறப்பால், விடுதி உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனாவால் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. தற்போது நோய் தொற்று குறைந்ததால், சுற்றுலா பயணியர் சில கட்டுப்பாடுகளுடன் ஏற்காடு வர அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், படகு இல்லம், பூங்காக்கள் திறக்கப்படவில்லை. கடந்த, 23ல், படகு இல்லம்

ஏற்காடு: ஏற்காட்டில் பூங்கா திறப்பால், விடுதி உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனாவால் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. தற்போது நோய் தொற்று குறைந்ததால், சுற்றுலா பயணியர் சில கட்டுப்பாடுகளுடன் ஏற்காடு வர அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், படகு இல்லம், பூங்காக்கள் திறக்கப்படவில்லை. கடந்த, 23ல், படகு இல்லம் திறக்கப்பட்டது. தற்போது, அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் உள்ளிட்ட பூங்காக்களும் திறக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர் என்பதால், அவர்களை நம்பியுள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'இன்று(நேற்று) பூங்காக்களில், 1,500 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். இதன் மூலம், கட்டணம், 23 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X