பொது செய்தி

இந்தியா

உலகிலேயே அதிக சிசிடிவி கேமரா கொண்ட நகரங்கள்; முதலிடத்தில் டில்லி, 3ல் சென்னை

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது.பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடிகிறது மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. அந்த
Delhi, Most CCTV, World, City, சிசிடிவி, கண்காணிப்பு, கேமரா, டில்லி, முதலிடம், உலகம், நகரங்கள்

புதுடில்லி: உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது.

பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடிகிறது மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. அந்த வகையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை 'போர்ப்ஸ் இந்தியா' ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகப்பட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் இந்த மிகுந்த கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


latest tamil news



போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன. அடுத்ததாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. அந்த வகையில் 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளன.


latest tamil news



முன்னணி நகரங்களை பின்னுக்கு தள்ளி டில்லி முதலிடத்தை பிடித்திருப்பது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டதாவது:
சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியதில் ஷாங்காய், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளியிருப்பது பெருமையளிக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் இதை அடைந்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-ஆக-202101:21:57 IST Report Abuse
Rajagopal நம்ம ஊரு தெரு லைட்டு மாதிரி இதுல எத்தன ஒழுங்கா வேல செய்யுது?
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
27-ஆக-202121:33:20 IST Report Abuse
K.n. Dhasarathan உண்மையில் எத்தனை கேமராக்கள் பயன் பாட்டில் உள்ளது ? அதில் சென்னை கடைசி இடத்திற்கு போய்விடும். சும்மா எல்லாம் ஒரு கணக்கிற்குத்தான். காவல்துறையே அதை மறுக்காது.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202119:53:36 IST Report Abuse
vpurushothaman கேமரா இங்கே - பிடித்த வழக்குகள் எங்கே ? ஒன்று குற்றங்கள் குறைந்திருக்க வேண்டும் அல்லது குற்றவாளிகள் பிடிபட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வெற்றுச் செலவுதான் மிஞ்சும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X