சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டயர் வெடித்து விபத்து: பசு பலி; மாடுக்கு கால் முறிவு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் பெரியசாமி, 60. வீரகனூரை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர்கள், வீரகனூரில் இருந்து, ஆத்தூர் நோக்கி, நேற்று, 'சுசுகி' காரில் சென்றுகொண்டிருந்தனர். மதியம், 12:30 மணிக்கு, தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, காரின் முன்புற டயர் வெடித்தது. அதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் கட்டியிருந்த இரு பசு

ஆத்தூர்: தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் பெரியசாமி, 60. வீரகனூரை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர்கள், வீரகனூரில் இருந்து, ஆத்தூர் நோக்கி, நேற்று, 'சுசுகி' காரில் சென்றுகொண்டிருந்தனர். மதியம், 12:30 மணிக்கு, தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, காரின் முன்புற டயர் வெடித்தது. அதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் கட்டியிருந்த இரு பசு மாடுகள் மீது மோதி, சாலையோர விவசாய நிலத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் இருந்த பாதுகாப்பு பலூன் வெளியே வந்ததால், பெரியசாமி, ரமேஷ் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், மரத்தில் கட்டியிருந்த மருதமுத்து என்பவரின் ஒரு பசு மாடு உயிரிழந்தது. மற்றொரு மாட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X