சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவருக்கு காப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், கல்பகனூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இந்திய தமிழன், 28. அதே பகுதியை சேர்ந்தவர் டயானா, 21. இவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் இடையே கருத்து வேறுபாடால், சில வாரங்களுக்கு முன், ஊர் முக்கியஸ்தர்கள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். நேற்று முன்தினம், தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, 'உன் பெற்றோர் வீட்டில், 5

ஆத்தூர்: ஆத்தூர், கல்பகனூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இந்திய தமிழன், 28. அதே பகுதியை சேர்ந்தவர் டயானா, 21. இவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் இடையே கருத்து வேறுபாடால், சில வாரங்களுக்கு முன், ஊர் முக்கியஸ்தர்கள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். நேற்று முன்தினம், தம்பதி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, 'உன் பெற்றோர் வீட்டில், 5 பவுன் நகை, 7 லட்சம் ரூபாய் வாங்கி வரவேண்டும்' என கூறிய கணவர், மனைவியை தாக்கியுள்ளார். காயமடைந்த டயானா, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, கணவர் மீது, வரதட்சனை கொடுமை, பெண் வன்கொடுமை வழக்கு பதிந்து, ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X