பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற விரும்பும் அரசு ஊழியர், ஆசிரியர் விவரம் சேகரிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஊகர உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் விவரங்களை தேர்தல் அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயதப்பணிகள் தொடங்கி உள்ளன. வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.இது குறித்து ஊரக வளர்ச்சிப் பிரிவு தேர்தலர்கள் கூறியதாவது: செப்., மாதம் 15 ம் தேதிக்குள் ஊரக


ஊகர உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் விவரங்களை தேர்தல் அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயதப்பணிகள் தொடங்கி உள்ளன. வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சிப் பிரிவு தேர்தலர்கள் கூறியதாவது: செப்., மாதம் 15 ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயதப்பணிகள் தொடங்கியுள்ளன.இதற்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல், வார்டு வாரியாக வாக்காளர்கள் பட்டியல், இன சுழற்சி முறை பட்டியல் தயாரிப்பு, ஓட்டுப் பெட்டிகள் தயார் செய்வது போன்ற பணிகள் நடந்து முடியும் தருவாயில் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற விரும்பும் அரசு ஊழியர், ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்பும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வராத போது மாற்று ஊழியர்களை பணியில் அமர்த்த ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 10 சதவீதம் பேர் ரிசர்வ் ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த சட்டசபை தேர்தலில் பணியாற்றி அரசு ஊழியர், ஆசிரியர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு தலைமை ஓட்டுச்சாவடி அலுலர் தலைமையில் ஏழு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு ஓட்டுச் சீட்டுக்கள் தனித்தனியாக வழங்கப்படும். அதாவது ஒரு வாக்காளர்கள் 4 ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X