பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்று தண்ணீரை கலெக்டர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆம்பூர் : பாலாற்றில் வரும் தண்ணீரை கலெக்டர் ஆய்வு செய்தார்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால், திருப்பத்துார் மாவட்டம், பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆனால் ஆம்பூர் பகுதியில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் செங்கிலிகுப்பம், மதுரா மாரப்பட்டு பகுதியில் பாலாற்று தண்ணீர் நுரையுடன் வந்தது.மாசு
பாலாற்று தண்ணீரை கலெக்டர் ஆய்வு

ஆம்பூர் : பாலாற்றில் வரும் தண்ணீரை கலெக்டர் ஆய்வு செய்தார்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால், திருப்பத்துார் மாவட்டம், பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆனால் ஆம்பூர் பகுதியில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் செங்கிலிகுப்பம், மதுரா மாரப்பட்டு பகுதியில் பாலாற்று தண்ணீர் நுரையுடன் வந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்து கழிவுகள் கலப்பதை தடுத்ததால் பாலாற்றில் நுரை இல்லாத தண்ணீர் வந்தது. இதையடுத்து மதுரா மாரப்பட்டு பகுதியில் பாலாற்றில் வரும் நீரை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா இன்று ஆய்வு செய்தார். மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலர் பிரகாஷ், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X