கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில், பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1.2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் இயங்கி வந்த மதி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த 2012ம் ஆண்டு, பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து 51 பேரிடம் ரூ.1,33,87,500 பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை நடத்திய தங்கவேலு
ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில், பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1.2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் இயங்கி வந்த மதி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த 2012ம் ஆண்டு, பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து 51 பேரிடம் ரூ.1,33,87,500 பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை நடத்திய தங்கவேலு என்பவரும் கைது செய்யப்பட்டார்.

கோவை முதலீட்டாளர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, தங்கவேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் ரூ.1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


கோவை கே.கே.புதுாரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 24. கடந்த, 2018 ம் ஆண்டு, 17 வயது சிறுமியை காதலித்தார். அப்போது, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தனர். அதில் சிறுமியை பாலசுப்ரமணியம் ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து பெற்றோர் கோவை மத்திய மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார் பாலசுப்ரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


latest tamil news


இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி(பொறுப்பு) ரவி, பாலசுப்ரமணியத்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharma - Madurai,இந்தியா
28-ஆக-202105:36:01 IST Report Abuse
Dharma //10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் ரூ.1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்////மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.// சரியான தீர்ப்பு.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-ஆக-202122:42:56 IST Report Abuse
Mohan ஒரு சர்வே எடுத்து போடுங்களேன். 80-90 களில், ஈமு பண்ணை மோசடி, காந்த படுக்கை மோசடி, கலைமகள் சபா, ஐடி கம்பெனி இராமு, கார் வாங்க எங்கிட்ட வாங்க ரமேசு இந்த ஊழல் எல்லாம் புழல் லதான் இன்னும் புல்லாங்குழல் ஊதிக்கிட்டு இருக்காங்களா ஒன்னும் தெரியலையே.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-ஆக-202122:24:41 IST Report Abuse
Mohan எவனோ என்ஜாய் பண்ண பொதுமக்கள் கூலி கொடுக்க கோர்ட்டே ஆணையிடுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X