டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்து தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டர் கைது

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (37) | |
Advertisement
மதுரை : மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு
டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்து தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டர் கைது

மதுரை : மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியை போலீசார் கைது செய்தனர்.


சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார். சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார். பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார்.


latest tamil news


இந்த நிலையில் மதுரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேனியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் உக்கிர பாண்டியிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரமும், சீமைச்சாமியிடம் இருந்து 45 ஆயிரமும் கைப்பற்றினர். அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
01-செப்-202121:33:31 IST Report Abuse
NARAYANAN.V சீனைப் பார்க்கையில் அர்ஷத் பண இரட்டிப்பு கோஷ்டியிடம் சிக்கியிருப்பார் போலும். அந்த நேரத்தில் இந்த லேடி இன்ஸ்பெக்டர் தலையிட்டது இவரைச் சிக்கலில் மாட்டிவிட்டதாகத் தெரிகிறது.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28-ஆக-202117:55:11 IST Report Abuse
M Selvaraaj Prabu படத்தை பார்த்தால் இன்ஸ்பெக்டர் போல தெரியலை. மொத்த குடும்பத்தையும் விசாரிங்கப்பா.
Rate this:
Cancel
28-ஆக-202111:45:54 IST Report Abuse
ஸாயிப்ரியா நல்ல வேளை இவரை(ளை) ஆயுதப் பிரிவிற்கு மாற்றவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X