பொது செய்தி

தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு 4வது முறையாக பரோல் நீடிப்பு

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள, பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழக்கும்படி அவரது தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு
பேரறிவாளனுக்கு 4வது முறையாக பரோல் நீடிப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள, பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழக்கும்படி அவரது தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.அதன்படி கடந்த மே மாதம் 28 ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அடிக்கடி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை, சிகிச்சை பெற வசதியாக இரண்டாவது முறையாக ஜூன் 29 ம் தேதியும், ஜூலை 28 ம் தேதி மூன்றாவது முறையும் அவரது பரோல் நீடிக்கப்பட்டது.மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கும்படி தாய் அற்புதம்மாள் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை பரோல் முடிந்து அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் தயாராக இருந்தனர். அப்போது, அற்புதம்மாள் கோரிக்கை ஏற்று நான்காவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது. இதனால் அவர் சிறைக்கு செல்லாம் வீட்டிலேயே இருந்தார். நான்காவது முறையில் பரோல் வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது தாய் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202100:00:54 IST Report Abuse
Gopalakrishnan S ... இவர்கள் குண்டு வெடிப்பில் இறந்த போலீஸ் மற்றும் பொது ஜனங்கள் அனைவரும் ஜப்பான் நாட்டவர்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X